தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசுக்காக வாதாட வக்கீல்கள் நியமிப்பது தொடர்பாக தமிழக அர சின் அட்வகேட் ஜெனரலுடன் அரசு ஆலோ சனை நடத்தியது. இதைத்தொடர்ந்து தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், சுப்ரீம் கோர்ட்டின் பிரபல வக்கீல்கள் மற்றும் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீல்களாக பணியாற்றி வருபவர்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வரும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வக்கீல்கள் 35 பேரின் பெயர் பட்டியலை பரிந்துரைத்தார். ப.சிதம்பரம் இடம்பெற்றார் இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, தமிழக அரசு அந்த பட்டியலுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த பட்டியலில் மூத்த வக்கீல்கள் கே.கே.வேணுகோபால். அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபில், முகுல் ரோத் தகி, ப.சிதம்பரம், சி.எஸ்.வைத்தியநாதன், கோபால் சுப்பிரமணியன், டி.எஸ்.சிவஞானம், எஸ்.நாகமுத்து. பி.என்.பிரகாஷ், எம்.சத்யநாராயணன், கே.ராதாகிருஷ்ணன், ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மாநிலத்தின் நலன் சார்ந்த முக்கிய வழக்குகளை தங்குதடையின்றி 'விரைந்து நடத்திட ஏதுவாக தமிழக அரசின் சார்பில் இவர்கள் ஆஜராகி வாதாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/35-individuals-including-senior-advocate-p-chidambaram-appointed-to-represent-the-tamil-nadu-government-in-the-supreme-court




