சமீபத்தில் முதல்-அமைச்சர் விஜய் இந்தியில் பேசியது போன்ற வீடியோ காட்சிகளும், ஆடியோவும் இணையதளங்களில் பரபரப்பாக வெளியானது. அந்த வீடியோவும், ஆடியோவும் செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்டு வெளியானது. இதுதொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.விசாரணையில், அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. இந்த வீடியோவும், ஆடியோவும் வெளியிட்டதில் ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேச மாநிலங் களை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் தனிப்படை பிரிவு ஒன்று ராஜஸ் தான் மாநிலத்திலும், மற்றொரு பிரிவு மத்தியபிரதேசம் மாநிலத்திலும் விசாரணை நடத்தினார்கள். ராஜஸ்தான் வாலிபர் கைது இந்த வீடியோவால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச நபர் ஒருவரை முத லில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தை சேர்ந்த ஷயாபுகான் (வயது 28) என்ற வாலிபரை கைது செய்தனர். அவர் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப் பட்டார். முதல்-அமைச்சர் விஜய் பேசுவது போன்ற வீடியோக்களும், ஆடியோக் களும் பாகிஸ்தானில் இருந்து முகநூல்வாயிலாக (பேஸ்புக்) அதிக அளவு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. இதன் பின்னணி குறித் தும், இதில் இந்தியாவைச் சேர்ந்த யாராவது தொடர்பில் இருக்கிறார் களா? என்பது குறித்தும் விசாரணை நடப்பதாக சி.பி. சி.ஐ.டி. போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தனர். மேலும், இதுதொடர் பாக சிலரை தேடி வருவதாகவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கைதானவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்கள், சிம்கார்டுகளை யும் டிஜிட்டல் முறையில் ஆய்வு செய்து வருவதாகவும் சி.பி. சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/youth-arrested-for-releasing-a-fake-video-depicting-chief-minister-vijay-speaking




