தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் மூன்றாவது மைல் பகுதியில் இந்திய உணவுக் கழகத்திற்கு சொந்தமான குடோனில், பயனாளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக ரேஷன் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த ரேஷன் குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த குடோனில் பழைய ஆவணங்கள் மற்றும் சாக்குகள் இருந்த பகுதியில் தீ மளமளவென பரவியது. இது குறித்து தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் சுமார் 6 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் பழைய ஆவணங்கள் முழுவதும் எரிந்து சாம்பலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தீ வேகமாக கட்டுப்படுத்தப்பட்டதால் குடோனில் இருந்த சுமார் 40 டன் ரேஷன் பொருட்கள் தீயில் சிக்காமல் பாதுகாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-massive-fire-at-ration-warehouse-old-documents-destroyed




