சென்னை, வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையில் மழை இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையின் மாநகர், புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதனப்டி, கிண்டி, மாம்பலம், ஆவடி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, வடபழனி, ராயப்பேட்டை, அண்ணாநகர், முகப்பேர், அம்பத்தூர், அயப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/weather/widespread-rain-in-chennai-areas




