பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்து விற்கப்படும் 'இ20' பெட்ரோலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும் இந்த பெட்ரோல் வாகனங்களின் என்ஜினை பாதிக்கும் என எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த பெட்ரோல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு மக்களவையில் நேற்று மத்திய நெடுஞ்சாலை மற் றும் போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி எழுத்துமூலம் பதிலளித்தார். அவர் கூறியதாவது:-பி.எஸ்-3, பி.எஸ்-4 ரக வாகனங்களில் இ20 எரிபொருளின் தரம் மற்றும் வீரியத்தை இந்தியன் ஆயில் கார்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து பரிசோதித்தன. கார்பன் வெளியேற்றம் குறைவு இந்த சோதனையில் வாகனத்தின் வகை மற்றும் பழமையை பொறுத்து, வாகனங்களின் எரிபொருள் தேவை 2 முதல் 6 சதவீதம் வரை குறையக் கூடும் என கண்டறியப்பட்டது. இதன் மூலம் நாட்டின் எரிபொருள் செலவினம் 6 சதவீதம் வரை குறையும் வாய்ப்பு உள்ளது.மேலும் டைனமோமீட்டரில் செய்யப்பட்ட என்ஜின் ஆயுள் சோதனைகளிலும், சாலையில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனைகளிலும் இ20 பெட்ரோல் காரணமாக எந்த கோளாறுகளும் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இ 10 எரிபொருளுடன் ஒப்பிடும்போது,இ20 எரிபொருள் சிறந்த முடுக்கம், மேம்பட்ட பயண தரம் மற்றும் சுமார் 30 சதவீதம் குறைவான கார்பன் வெளியேற்றத்தை வழங்குகிறது.இ20 எரிபொருளால் அசாதாரணமான அரிப்பு, தேய்மானம் அல்லது வாகனத்தின் ஆயுள் குறைவு என்று எதுவும் ஏற்படவில்லை என்பதை உற்பத்தியாளரின் சேவைத்தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறு நிதின் கட்காரி கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/does-e20-petrol-damage-vehicle-engines-nitin-gadkari-clarifies




