இரண்டு நாள்களாக, ‘சர்க்கரை’ குறித்த பேச்சுகள் எல்லாப் பக்கமும் அடிபடுகிறது. ஈரான் போர், காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் சர்க்கரை உற்பத்தி மற்றும் சப்ளையில் இந்த ஆண்டு கடும் அடி. இதனால், வருகிற அக்டோபர் 31-ம் தேதி வரை, சுங்க வரி இல்லாமல் 10 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்னொரு பக்கம், சர்க்கரை உற்பத்தி சார்ந்த நிறுவனங்களின் பங்குகளும் பங்குச்சந்தையில் கடந்த மூன்று தினங்களாக ஏறுமுகத்தில் இருந்தன. ஆனால், இன்று இல்லை. பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்Economic D-Day: பில்லியன் டாலர் ஆயுதங்களால் முடியாததை தடைகளால் செய்ய முடியுமா? ட்ரம்பின் திட்டம்! இந்த நிலையில், சர்க்கரை சார்ந்த பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா என்று பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் கூறுகிறார். ‘சர்க்கரைத் துறை சார்ந்த பங்குகளில் (Sugar Stocks) முதலீடு செய்யலாமா?’ என்று கேட்டால், அந்தப் பங்குகளின் விலை ஏன் உயர்கிறது என்பதற்கான காரணத்தை முதலில் புரிந்துகொள்வது அவசியம். முதலாவதாக, சர்க்கரை உற்பத்தித் திறனில் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக, உற்பத்தியாளர் நிலையில் சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது. சர்க்கரை தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருளான கரும்பும், அதன் கழிவுகளும் எத்தனால் கலப்புத் திட்டத்திற்காக அதிகளவில் திருப்பி விடப்படுவதே இதற்கு முதன்மைச் சந்தைப் பின்னடைவு ஆகும். சந்தையில் சப்ளை குறையும்போது, இயல்பாகவே தேவை அதிகரிக்கும் சூழல் உருவாகி, சர்க்கரையின் விலையும் உயர்கிறது. இரண்டாவதாக, வரவிருக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகள் பண்டிகைக் காலமாகும். பண்டிகைக் காலத்தில் சர்க்கரையின் நுகர்வு அதிகரிக்கும் என்பதால், அதன் தேவையும் பல மடங்கு உயரும். உற்பத்தி குறைவு, சந்தையில் சப்ளை பற்றாக்குறை மற்றும் அதிகரிக்கும் தேவை ஆகிய காரணங்களால் சர்க்கரை உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் நல்ல ஏற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. சர்க்கரைGold: தங்கம் விலை உயர்வு: காரணம் என்ன? இந்தியாவில் இன்னும் விலை ஏறுமா? அதேவேளையில், அரசு இதைக் கட்டுப்படுத்தச் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உதாரணமாக, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட அளவிற்கு மேல் சர்க்கரையை இருப்பாக வைக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டையும், சுங்கவரியற்ற சர்க்கரை இறக்குமதி போன்ற தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. முதலீட்டாளர்களுக்கான ஆலோசனை: சர்க்கரைப் பங்குகள் தற்போது நல்ல சுறுசுறுப்புடன் காணப்பட்டாலும், இது ஒரு தற்காலிகமான அல்லது குறிப்பிட்ட சீசனுக்கான டிரெண்ட் மாற்றமே ஆகும். குறுகிய கால வர்த்தகம் (Short-term Trade): அடுத்த 3 முதல் 4 மாதங்கள் வரையிலான பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, குறுகிய கால வர்த்தகத்திற்கு இத்துறையைப் பரிசீலிக்கலாம். பங்குகளை வாங்கும் முறை: கடந்த சில நாட்களாகவே சர்க்கரைப் பங்குகள் தொடர்ந்து விலையேற்றத்தைச் சந்தித்து வருகின்றன. எனவே, அவசரப்பட்டு வேகமாகச் செல்லும் ரயிலில் ஏறுவது போல், தற்போதைய அதிக விலையில் உடனடியாக முதலீடு செய்யக் கூடாது. அரசு இறக்குமதிச் சலுகைகளை அறிவித்தால், சர்க்கரை விலையில் சிறிய சரிவு (Correction) வர வாய்ப்புள்ளது. அதனால், ‘விலை சரியும்போது வாங்குவது’ சிறந்த உத்தியாக இருக்கும். அடுத்த காலாண்டில் இத்துறை அதிக ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாக இருக்கும் என்பதால், சந்தை மாற்றங்களைக் கவனமாக அணுகி வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/personal-finance/share-market/sugar-stocks-is-this-the-right-time-to-invest-expert-explains




