விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், 'தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு' கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தச் சூழலில், வி.சி.க துணை பொதுச்செயலாளரும், சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னிஅரசுவிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம். “கல்வி வளாகத்தினுள் மதம், சாதி அடையாளங்களுடன் யாரும் வரக்கூடாது என கூறிய அமைச்சர் ராஜ்மோகன், மறுநாளே மத அடையாளத்துக்கு மட்டும் விலக்கு கொடுத்துவிட்டாரே… பா.ஜ.க-வின் மிரட்டலுக்குப் பயந்துவிட்டாரா?” "சாதி, மத ரீதியிலான எந்த அடையாளங்களுடனும் கல்வி வளாகத்தினுள் மாணவர்கள் வரக்கூடாது என்பதுதான் த.வெ.க அரசின் நிலைப்பாடு. இதுகுறித்து கூடுதலான தகவலை நீங்கள் கல்வியமைச்சரிடம்தான் கேட்கவேண்டும்." "தமிழ் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களை அடையாளப்படுத்துகிற 'ஆதிதிராவிடர்' என்ற பெயரை, 'சமூக நீதித்துறை' என ஒட்டுமொத்த ஒடுக்குமுறைகளுக்கும் பொதுவான பெயராக மாற்றுவதே அரசியல் ரீதியாக பின்னடைவுதானே?" "அப்படியல்ல. 'ஆதி திராவிடர்' என்ற பெயரே, தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட அட்டவணை சாதிகளுக்கான ஒட்டுமொத்த அடையாளப் பெயர்தான். ஆனால், இன்றைக்கு அதை சிலர், ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கான அடையாளமாக மாற்ற சிலர் முயற்சி செய்கிறார்கள். அந்த அரசியல் நோக்கம் தவறு. அதேசமயம், பொது நோக்கோடு, பொது இலக்கோடு இன்றைய முதல்வர் இந்தப் பெயர் மாற்றத்தை வைத்திருக்கிறார். ஒருவேளை பின்னாளில் இந்தத் துறையை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தோடு, இந்தப் பெயர் மாற்றத்தை அவர் கொண்டு வந்திருக்கலாம். அதுபற்றி எனக்குத் தெரியவில்லை. எது எப்படியிருந்தாலும் இவ்விஷயத்தில், கருத்தியல் ரீதியாக எங்கள் தலைவர் திருமாவின் கருத்து மிகச் சரியானது. எனவே, என்னுடைய கருத்தும் அதுதான்!" "வி.சி.க சார்பில், வருகிற 17-ம் தேதி தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு நடத்தப்படுவதன் நோக்கம் என்ன?" வருகிற ஆகஸ்ட் 17 அன்று வி.சி.க சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், 'தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு' நடைபெறவிருக்கிறது. இதற்கான அறிவிப்பு வெளியானதுமே உலகம் முழுக்க இருக்கிற தமிழீழ ஆதரவு இயக்கங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்தன. குறிப்பாக 'தமிழீழ விடுதலைப் புலிகள்' சார்பாக மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்துச் செய்தியே கொடுத்திருக்கிறார்கள்.இன்றைக்கு மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய பா.ஜ.க அரசு, 'ஒரே நாடு; ஒரே மொழி' என இந்தியை வலுக்கட்டாயமாக அனைவர் மீதும் திணித்துவருகிறது. இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களை, பல்வேறு மொழிகளைக் கொண்ட ஒரு தேசம். எனவே, 'ஒரே தேசம்; ஒரே மொழி' எனச் சொல்வதே தேச நலனுக்கு எதிரானது. இந்தச் சூழலில், அனைத்து தேசிய இனங்களும் இணைந்த, உள்ளடக்கிய நாடுதான் இந்தியா என்பதை நாங்கள் கட்டமைக்க விரும்புகிறோம். திருமாவளவன் தமிழ் தேசியம் என்பது, கன்னடர்களுக்கோ, தெலுங்கர்களுக்கோ அல்லது மலையாளிகளுக்கோ எதிரானது அல்ல. எங்களுடைய சுய நிர்ணயத்தை, தமிழர் இறையாண்மையை பாதுகாப்பதுதான் எங்கள் நோக்கம். அந்தவகையில், வி.சி.க-வின் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்!" "தமிழ்த் தேசிய மாநாடு என்பதே இந்திய தேசியத்துக்கு எதிரானது என எதிர்த்தரப்பினர் குற்றம்சாட்டுகிறார்களே?" "1956, நவம்பர் 1-ம் தேதி மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அம்பேத்கர் இதைத் தெளிவுபடுத்துகிறார். ஒவ்வொரு மாநிலத்துக்குமான அடையாளம், வளர்ச்சி, உரிமை என்பது வெறுமனே அந்தந்த மாநிலங்களுக்கு தொடர்புடையது மட்டுமல்ல. அதுதான் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தேசிய அடையாளம்! இதைக்குறிப்பிட்டுத்தான், கடந்த 2010-ம் ஆண்டிலேயே நாங்கள் 'தமிழர் இறையாண்மை மாநாடு' நடத்தியிருக்கிறோம். தமிழருக்கென்று தனிக் கொடியும் ஏற்றியிருக்கிறோம். கர்நாடகாவுக்கென்று ஒரு தனிக்கொடி இருக்கிறதல்லவா. அதுதான் கர்நாடகத்தின் இறையாண்மை. அதுபோல், தமிழ்நாட்டுக்கென்றும் தனிக்கொடி வேண்டும்; அதுதான் தமிழ்நாட்டின் இறையாண்மை. இதை எப்படி இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று சொல்கிறார்கள்?" வைகோ மீது பூக்களை மட்டுமே பொழிவோம்! - வாஞ்சை காட்டும் வன்னி அரசு "நாட்டைப் பிளவுப்படுத்தும் முயற்சி இது என இந்துத்துவ சக்திகளின் குற்றச்சாட்டை எப்படி மறுப்பீர்கள்?" "ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க போன்ற அமைப்புகள், இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளாமல், இந்து தேசம் என்று கட்டமைக்க விரும்புகிறார்கள். இதுதான் இந்திய இறையாண்மைக்கே எதிரானது. 'இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்' என தொடர்ச்சியாக சொல்லி வருகிறது ஆர்.எஸ்.எஸ். அதேபோல், பிரதமர் மோடியும் இந்தியாவை இந்து நாடாக சித்திரிப்பவர்களோடே தொடர்ச்சியாக உரையாடி வருகிறார். இந்த செயல்பாடுகள் அனைத்தும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிரானது. இந்தச் சூழலில், நாங்கள் நடத்தவிருக்கிற 'தமிழ்தேச எழுச்சி மாநாடு' என்பது இந்து தேசத்துக்கும், இந்துத்துவ தேசியத்துக்கும்தான் எதிரானது! மதவாத வழியில் பா.ஜ.க கட்டமைக்கிற இந்த இந்து தேசத்தை வி.சி.க ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது." சீமான் "தமிழக அரசியலில் தொடர்ந்து தமிழ்த் தேசியம் பேசிவரும் நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வருகிற இடைத்தேர்தலில் த.வெ.க-வுக்கு எதிராக பொதுவேட்பாளராக களமிறக்கப்படுவதாக பேச்சு எழுந்துள்ளதே?" "சீமான் பேசிவருவது போலி தமிழ்த்தேசியம். வாழ்நாள் முழுக்க இந்து தேசியத்துக்கு எதிராகப் பேசிவந்த பெரியாரை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், சீமான் போன்ற போலி தமிழ் தேசியவாதிகள் பா.ஜ.க-வின் இந்துத்துவத்தை எதிர்ப்பதில்லை. கூடுதலாக, 'பார்ப்பன கடப்பாரையைக் கொண்டு திராவிடக் கோட்டையை இடிப்பேன்' என்று சொல்லிவருகிறார். இது தமிழ் தேசியத்துக்கே எதிரானது; துரோகம் செய்வதும்கூட. இப்படிப்பட்ட ஒருவரை இங்குள்ள திராவிடக் கட்சிகள் எப்படி பொதுவேட்பாளராக தேர்தலில் களமிறக்க முடியும்? ஆர்.எஸ்.எஸ்-ஸின் மற்றொரு வடிவமான சீமான், ஆரியத்துக்கும் பார்ப்பனர்களுக்குமான வேட்பாளராக வேண்டுமானால் களமிறங்கலாம்!" முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/rss-cant-be-common-candidate-minister-vanni-arasu-slams-seeman



