சென்னை, இலங்கை சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரர்களான கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் கிழக்கு மண்டல அணிக்கு எதிரான துலீப் கோப்பை இறுதிப்போட்டிக்கான தெற்கு மண்டல அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறுதிப்போட்டி செப்டம்பர் 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் தெற்கு மண்டலம் மற்றும் கிழக்கு மண்டலம் அணிகள் 2-வது முறையாக நேருக்கு நேர் மோத உள்ளன. இதற்கு முன்பு 1970-71 சீசனில் இரு அணிகளும் இறுதிப்போட்டியில் சந்தித்தபோது, தெற்கு மண்டல அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 13 முறை சாம்பியன் தெற்கு மண்டல அணி இதுவரை 13 முறை துலீப் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடைசியாக 2023-ம் ஆண்டு அந்த அணி கோப்பையை கைப்பற்றியது. மறுபுறம், கிழக்கு மண்டல அணி கடைசியாக 2012-13 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது. தற்போது அந்த அணி தனது 3-வது துலீப் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/duleep-trophy-final-in-chennai-kl-rahul-padikkal-and-siraj-included-in-the-south-zone-squad




