AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டீனேஜர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘ChatGPT for Teens’ என்ற புதிய அனுபவத்தை OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது. 13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இதில், வழக்கமான ChatGPT வசதிகளுடன் கூடுதல் பாதுகாப்பு கட்டுப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. இதில் கவனம் ஈர்க்கும் அம்சம் ‘Study Mode’. மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக விடை கொடுப்பதற்குப் பதிலாக, பாடத்தை படிப்படியாகப் புரிந்துகொள்ளும் வகையில் ChatGPT வழிகாட்டும். இதனால் கேள்விக்கான விடையை மட்டும் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக, பாடத்தைப் புரிந்துகொண்டு கற்றுக்கொள்ள முடியும். மேலும், ‘Quiet Hours’ மூலம் இரவு நேரம் போன்ற குறிப்பிட்ட நேரங்களில் ChatGPT பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும். இதை பெற்றோர்கள் நிர்வகிக்கலாம். "Sensitive Content-க்கும் கடும் கட்டுப்பாடு"- டீனேஜர்களுக்கு பொருத்தமற்ற அல்லது ஆபத்தான உள்ளடக்கங்களை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு விதிகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வன்முறை(violence), சுயதீங்கு(self harm), உணவைத் தவிர்ப்பது போன்ற ஆரோக்கியத்துக்கு ஆபத்தான பழக்கங்கள் போன்ற முக்கியமான விஷயங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்கும். பெற்றோர்கள் குழந்தையின் ஒவ்வொரு ChatGPT உரையாடலையும் பார்க்க முடியாது. ஆனால், தீவிரமான பாதுகாப்பு ஆபத்து கண்டறியப்பட்டால் எச்சரிக்கை வழங்கும் வசதி உள்ளது. AI-யை பயன்படுத்தும் புதிய தலைமுறைக்கு அறிவு மட்டுமல்ல. பாதுகாப்பும் முக்கியம்! என்ற நோக்கத்தில் இந்த புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/technology/chatgpt-for-teens-new-quiet-hours-study-mode-explained




