கொழும்பு, இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இது தொடர்பாக இந்திய கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், 'இந்தியாவின் 600-வது டெஸ்டில் வெற்றி பெற்றது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. மிகவும் திருப்தி அளிக்கிறது. 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் நாங் கள் வலுவான நிலையில் இருந்தோம். ஆனால் வானிலை காரணமாக கடைசி நாள் ஆட்டம் நடக் குமா என்று உறுதியாக தெரியாத நிலையில், இங்கு வந்து ஆடிய போது சற்று அழுத்தத்திற்கு உள் ளானோம். ஆனால் அணி உண்மையிலேயே சிறப்பாக செயல்பட்டது. மானவ் சுதர் அற்புதமாக பந்து வீசுகிறார். இதுவரை பங்கேற்றுள்ள இரு டெஸ்டிலும் அவரது பந்து வீச்சு அபாரமாக இருந்தது. மிகவும் திறமை வாய்ந்தவராகவும், இந்திய அணிக்காக நீண்ட காலத் திற்கு விளையாடக்கூடியவராகவும் தெரிகிறார். தேவ்தத் படிக்கல்லின் பேட்டிங்கை பார்க்க பிரமாதமாக இருந்தது. சதம் அடித்த பிறகும் அதை பெரிய இன்னிங்சாக (167 ரன்) மாற்றிய விதம் அருமை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதே எங்களது இலக்கு. அதற்காகத் தான் நாங்கள் விளையாடுகிறோம். டெஸ்டில் வெற்றி காண்பது எளிதல்ல. எனவே இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/our-goal-is-to-reach-the-world-test-championship-final-gill




