லண்டன், தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறை பயணமாக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்று உள்ளார். அதற்காக அவர் நேற்று முன்தினம் (10-ந் தேதி) இரவு 10 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில் புறப்பட்டார். துபாய் வழியாக லண்டன் சென்ற விஜய், நேற்று காலை 7 மணியளவில் லண்டன் ஹீத்ரோ விமான நிலை யத்தை சென்றடைந்தார். இது இந்திய நேரப்படி காலை 11.30 மணி ஆகும். விமான நிலை யத்தில் காத்திருந்த பிரிட்டன் தமிழ் சங்க தலைவர் ஜேக்கப் ரவிபாலன், த.வெ.க. துரை கண்ணன் மற்றும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் அவருக்கு பூங்கொத்துகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதே முக்கிய நோக்கம் தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுமே விஜய்யின் பிரிட்டன் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். மேம்பட்ட உற்பத்தி. மோட்டார் வாகனங்கள். மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களை விஜய் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் பிரிட்டன் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, இன்று புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத்திடல் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை அவர் பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்தப் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார். அவருடன் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி கார் பந்தய வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டி. இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்கு தொடங்கி இரவு 11.45 மணிக்கு நிறைவடைகிறது. சில்வர்ஸ்டோன் சர்க்கியூட்டிற்கு நேரில் சென்ற விஜய் இந்த நிலையில், கார் பந்தயத்தை துவக்கி வைப்பதற்காக, சில்வர்ஸ்டோன் சர்க்கியூட்டிற்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள லண்டன் வாழ் தமிழர்கள், அவருடன் செல்பி எடுத்து ஆட்டோகிராப் பெற்றுக் கொண்டனர். அஜித்தை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த விஜய் தொடர்ந்து, அங்கு அஜித்தை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய், அஜித்தை ஆரத்தழுவி கார் பந்தயத்தில் வெற்றி பெற தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். முதல்-அமைச்சர் மற்றும் நடிகர் அஜித்குமார் ஒன்றாக இணைந்து ரசிகர்களை நோக்கி கையசைத்தனர். இதனைக் கண்ட இங்திலாந்து வாழ் தமிழர்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர். CM விஜய்யை கட்டியணைத்து வரவேற்ற அஜித். — Thanthi TV (@ThanthiTV) September 12, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/chief-minister-meets-vijay-and-ajith-in-london-enthusiastic-welcome-from-fans




