அகமதாபாத், மத்திய மந்திரி அமித்ஷா, இந்தியாவின் முதல் எல்.என்.ஜி. ரெயிலை தொடங்கி வைத்தார். ரூ.1500 கோடி திட்டங்கள் குஜராத்தில் சபர்மதி பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். இதில் ரூ.1,500 கோடிக்கும் அதிகமான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. டபிள்யூ.ஏ.ஜி.-12 என்ஜின் பராமரிப்பு பணிமனை, தானியங்கி சிக்னல் அமைப்பு, 'கவச்' ரெயில் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் இதில் அடங்கும். முதல் எல்.என்.ஜி. ரெயில் சபர்மதி ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவில் கியாஸ் மூலம் இயங்கும் முதல் எல்.என்.ஜி. (திரவ இயற்கை எரிவாயு) இரட்டை எரிபொருள் ரெயிலை அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ரெயில்வேயை நவீனமயமாக்கி வருகிறது. சரக்கு போக்குவரத்துக்கு தனி வழித்தடம், விரைவு ரெயில் திட்டம், நவீன ரெயில் நிலையங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு வருகின்றன. ஊழல் காங்கிரஸ் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஊழல் நடைபெற்றன. அந்த கட்சியினர் பேசும் விஷயங்களை மக்கள் புள்ளிவிவரங்களுடன் விவாதிக்க அழைக்க வேண்டும். மோடி ஆட்சியில் ஊழல் தொடர்பாக சிறிய குற்றச்சாட்டுகூட நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/indias-first-lng-powered-train-launched-by-union-minister-amit-shah




