தென்காசி, தென்காசி மாவட்டம், நெற்கட்டும்சேவல் பகுதியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு நேரில் ஆய்வு செய்து போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார். ஆகஸ்ட் 20-ந்தேதி ஒண்டிவீரனின் 255-வது நினைவு நாள் தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெற்கட்டும்சேவல் பச்சேரி கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவிடம் அமைந்துள்ளது. வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி ஒண்டிவீரனின் 255-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளது. திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு ஆய்வு ஒண்டிவீரனின் நினைவு நாள் விழாவை முன்னிட்டு புளியங்குடி பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு நேரில் ஆய்வு செய்து போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது தென்காசி மாவட்ட எஸ்.பி. அசோக்குமார் உடனிருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-police-dig-thirunavukkarasu-inspects-the-ondiveeran-memorial




