புது டெல்லி, தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, விளையாட்டு ஆர்வலர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம், மன உறுதி ஆகியவை ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளன. மேஜர் தயான் சந்த் ஹாக்கி வீரரும், சாதனையாளருமான மேஜர் தயான் சந்த்க்கு மரியாதை செலுத்திய பிரதமர், இந்திய ஹாக்கி அணிக்கு அவர் ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பும், அவரது திறமையும், பல தலைமுறையினருக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருவதாக தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- சாதனையாளர் "விளையாட்டை விரும்பும் ஒவ்வொருவருக்கும், உங்களது அர்ப்பணிப்பு, ஆர்வம், மன உறுதி ஆகியவை அனைவரையும் பெருமிதம் கொள்ள செய்கின்றன. மேலும், தனது திறமையால் பல தலைமுறையினருக்கு உத்வேகம் அளித்து வரும் சாதனையாளர் மேஜர் தயான் சந்த்க்கும் மரியாதை செலுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/national-sports-day-pm-modi-greetings




