சென்னை, சென்னை சேத்துபட்டில் நடைபெற்ற விழாவில் 'மக்கள் மேடை' இணையதளத்தை தொடங்கி வைத்த லதா ரஜினிகாந்த் ரஜினி கண்டிப்பாக சொன்னதை செய்வார் என்று தெரிவித்துள்ளார். 'மக்கள் மேடை' இணையதளம் அறிமுகம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சிட்டிசன் பிளாட்பார்ம்' (மக்கள் மேடை) என்ற புதிய இயக்கத்தை சமீபத்தில் தொடங்கினார். இந்த அமைப்பிற்கான பாரத சேவா இணையதளத்தை நேற்று சென்னை சேத்துபட்டில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் பயன்பெறும் வகையில் 'மக்கள் மேடை' இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த விழாவில், லதா ரஜினிகாந்த் பேசியதாவது:- பழைய இந்தியாவை எடுத்துக்கொண்டால் ராஜாக்கள் எங்கேயோ இருப்பார்கள். ஆனால் மக்கள் தங்களை தாங்களே நிர்வகித்து கொண்டு ஆங்காங்கே கிராம சபா போன்ற குழுக்கள் அமைத்து அழகாக வழிநடத்தி சென்றார்கள். அதுபோன்ற நடைமுறையை மக்கள் மேடை மூலம் ஒவ்வொரு கிராமத்துக்கும் கொண்டு செல்ல இருக்கிறோம். நீர்நிலைகள், மாடுகள் பாதுகாப்பு, கழிவுகள் அகற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். மக்கள் ஒன்றிணைந்தால் எந்த விஷயத்திலும் வெற்றி பெற முடியும்" என்றார். ரஜினி கண்டிப்பாக சொன்னதை செய்வார் பின்னர் அவரிடம், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ரஜினிகாந்த் கடந்த 2002-ம் ஆண்டு ரூ.1 கோடி வழங்குவதாக கூறியிருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த லதா ரஜினிகாந்த், அந்த விஷயம் எப்போது நடக்கிறதோ, அப்போது ரஜினி கண்டிப்பாக சொன்னதை செய்வார். மேலும், மக்கள் மேடை அமைப்புக்கு ரஜினிகாந்தின் முழு ஆதரவும் ஆசியும் இருப்பதாகவும் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/cauvery-vaigai-gundar-link-project-rajinikanth-will-do-what-he-says-latha-asserts




