பெங்களூரு, பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் ரூ.36 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த 2 பேரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். 2 பயணிகள் மீது சந்தேகம் பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் 2 முனையங்கள் உள்ளன. நேற்று அதிகாலை பாங்காக்கில் இருந்து ஒரு விமானம் பெங்களூரு முதலாவது முனையத்துக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கவரித்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஆகியோர் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது 2 பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதையடுத்து அவர்கள் 2 பேரையும் தனியாக அழைத்துச் சென்று தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் அவர்கள் இருவரும் தங்களது பேண்ட்டில் ரகசிய அறை அமைத்து தங்கத்தை துகள்களாக மாற்றி மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. 2 பேர் கைது அதையடுத்து அவர்கள் இருவரையும் பிடித்த சுங்கவரித்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், அவர்களிடமிருந்து 260 கிராம் தங்க துகள்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்களது பெயர் லட்சுமண் மற்றும் ராகவேந்திரா என்பதும். இருவரும் பாங்காக்கில் இருந்து பெங்களூரு வழியாக ஆந்திராவுக்கு அந்த தங்கதுகள்களை கடத்திச் செல்ல இருந்ததும் தெரியவந்தது. எச்சரிக்கை அதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடந்து இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.36 லட்சத்து 40 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. விமான நிலையத்தில் நடைபெறும் சோதனை இனி தீவிரப்படுத்தப்படும் என்றும், தங்கம், போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுங்கவரித்துறை அதிகாரிகளும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/two-arrested-for-smuggling-gold-worth-36-lakh-by-flight-from-bangkok-to-bengaluru




