புதுடெல்லி, விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் நோக்கில், மொத்தம் ரூ.3.15 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டுடன், ‘பி.எம். கிசான்’ (PM-KISAN) திட்டத்தை 2030-31 ஆம் நிதி ஆண்டு வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட ‘பி.எம். கிசான்’(PM-KISAN) என்று அழைக்கப்படும் ‘பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி’ திட்டத்தின் கீழ், தகுதியுள்ள நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் ரூ.4.5 லட்சம் கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘பி.எம். கிசான்’ திட்டத்தை 2026-27 ஆம் நிதி ஆண்டு முதல் 2030-31 ஆம் நிதி ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து செயல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும், இந்த காலகட்டத்தில் இத்திட்டத்திற்காக மொத்தம் ரூ.3,15,614 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/pm-kisan-scheme-for-farmers-union-cabinet-approves-extension-until-2031




