தாராபுரம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். அப்போது சத்தியபாமா 'விருப்பம் இருந்தால் வாக்களியுங்கள்' என்று கூறிய தால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பரபரப்பு குற்றச்சாட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. சார்பில், போட்டி யிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக ஆனவர் சத்தியபாமா. இவர், அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக, தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தி.மு.க., அ.தி.மு.க.வும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்ததாகவும் அவர் பரப ரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தொடர்ந்து அவர், அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார். பொதுமக்கள் அதிருப்தி இந்தநிலையில் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில், த.வெ.க. வேட்பாளராக மீண்டும் சத்தியபாமா களம் இறங்கி உள்ளார். அ.தி.மு.க. சார்பில், வெற்றி பெற்று தனது பதவியை ராஜினாமா செய்த சத்தியபாமா, வேறு கட்சியில் இணைந்து மீண்டும் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுவது. தொகுதி மக்களி டையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அவர் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக குண்டடம் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வரும் அவருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீஸ் பாதுகாப்புடன் அவர் பிரசாரம் செய்து வருகிறார். விருப்பம் இருந்தால் வாக்களியுங்கள் இந்தநிலையில், குண்டடம் அருகே பெரியகுமாரபாளையம் ஊராட்சியில் வேட் பாளர் சத்தியபாமா பிரசாரம் செய்ய சென்றார். அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆத்திரமடைந்த வேட்பாளர் சத்தியபாமாவும். த.வெ.க. நிர்வாகிகளும், ஒலிப்பெருக்கியில் பொதுமக்களை விருப்பமிருந்தால் தவெ.க.வுக்கு வாக்களியுங்கள், இல்லை என்றால் விட்டுவிடுங்கள் என்று பேசினர். இது வாக்காளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து வேட்பாளர் சத்தியபாமா, தனது பிரசாரத்தை பாதியிலேயே முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். த.வெ.க. வேட்பாளருக்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது, அக்கட்சி நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/tarapuram-by-election-strong-opposition-to-thaweka-candidate




