வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமூக மக்கள் அதிகம். இதனால், இந்தத் தேர்தலில் பாமக எந்தக் கட்சிக்கு ஆதரவளிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கவனிக்கப்பட்டது. தவெக, திமுக, அதிமுக எனக் கட்சிகள் அனைத்தும், பாமகவிடம் ஆதரவு கேட்டிருந்த நிலையில், ஒரு ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். அன்புமணி ராமதாஸ் அறிக்கைமேற்கு வங்கம்: நந்திகிராம் தொகுதியில் தேர்தல்; காங்கிரஸுக்கு மம்தா ஆதரவு - வேட்பாளர் திடீர் கைது! நேற்று அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் பாமக ஆதரவு இல்லை! தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது. இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மற்றும் இரு தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் நடத்திய கலந்தாய்வுகளின் முடிவில், எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/pmk-to-support-no-party-in-madurantakam-dharapuram-bypolls




