புதுடெல்லி, கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி ‘மேக் இன் இந்தியா’(Make in India) திட்டத்தை தொடங்கி வைத்தார். இது தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலான இந்திய அரசின் முக்கிய உற்பத்தித் திட்டமாகும். இந்தியாவில் முதலீடுகளை எளிதாக்குதல் மற்றும் ஈர்த்தல், சிறந்த உற்பத்தி உள்கட்டமைப்பை உருவாக்குதல், இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுதல் உள்ளிட்டவை இந்த திட்டத்தின் நோக்கங்களாகும். இந்நிலையில், ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டு இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் அரைக்கடத்தி (semiconductor) துறை, விண்வெளித்துறை, ரெயில் இன்ஜின்கள் மற்றும் பெட்டிகள் தயாரிப்பு, கப்பல் கட்டுமானம், மெட்ரோ ரெயில் கட்டமைப்புகள், வாகனத் துறை, மருந்துகள், சூரிய ஆற்றல் மற்றும் அலைபேசி உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களை காட்டும் வகையிலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், “இந்தியாவில் அதிக தயாரிப்பு, இந்தியாவில் அதிக முதலீடு, இந்தியாவில் இருந்து அதிக ஏற்றுமதி. அனைத்துத் துறைகளிலும் ஒரு மாற்றம் கண்கூடாகத் தெரிகிறது. 'மேக் இன் இந்தியா' என்பது, இந்தியா வளரவும் செழிக்கவும் வழிவகுக்கும் உள்கட்டமைப்பு, தொழில்முனைவு மற்றும் புத்தாக்கத்தை உருவாக்கும் திட்டமாகும்” என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/12-years-since-the-launch-of-the-make-in-india-initiative-pm-modi-expresses-pride




