சென்னை, சென்னை செங்குன்றம் அருகே ஒடிசா மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 11.2 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்து, வடமாநில இளைஞர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர். போலீசாரின் அதிரடி சோதனை தமிழக முதல்வர் மற்றும் தமிழக காவல்துறை இயக்குநரின் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் "போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு" திட்டத்தின் கீழ் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இன்று (திங்கட்கிழமை) காலை, சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வடமாநில இளைஞர்கள் கைது அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பெரிய பைகளுடன் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அவர்களின் பைகளைச் சோதனையிட்டபோது, அதற்குள் சிறு சிறு பொட்டலங்களாக மடிக்கப்பட்ட 11.2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கஞ்சாவைக் கடத்தி வந்த ஒடிசாவைச் சேர்ந்த கிஷோர் பேபாரி மற்றும் பீகாரைச் சேர்ந்த சந்தின் குமார் ஆகிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணை கைது செய்யப்பட்ட வடமாநில வாலிபர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒடிசா மாநிலத்தின் உள்பகுதிகளில் இருந்து மிகக் குறைந்த விலைக்கு அந்த கஞ்சா பொட்டலங்களை வாங்கியுள்ளனர். பின்னர் இதனை சென்னை மற்றும் திருப்பூரில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் ஏஜென்ட்டுகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு ரெயில்கள் மற்றும் பேருந்துகள் வழியாக கடத்தி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து 11.2 கிலோ கஞ்சா போதைப்பொருள் மற்றும் அவர்களது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கடத்தல் நெட்வொர்க்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/2-youths-arrested-for-smuggling-ganja-from-odisha-to-chennai




