சென்னை, பெண்ணுக்கு மட்டும்தான் கற்பு இருக்கா? ஆண்களுக்கு கற்பு இல்லையா? என சிபிஎம் பெண் எம்.எல்.ஏ.லதா கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாக்கப்பட்டனர். சட்டம், ஒழுங்கு சீராக இருந்தது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் கற்பு என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார். இதற்கு பதில் அளித்து பேசிய சிபிஎம் பெண் எம்.எல்.ஏ.லதா, முன்னாள் முதல்-அமைச்சர் பேசும் போது கற்பு தொடர்பான ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். அது போன்று குறிப்பிடும் போது பாலியல் வன்முறை என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம். அவர் குறிப்பிடுவது போன்ற ஒரு சம்பவம் நடந்தால், பெண்ணுக்கு மட்டும் தான் கற்பு பறிபோகுதா? ஆணுக்கு இல்லையா? அது போன்ற சம்பவங்களில் முதலில் கற்பு பறிபோவது ஆணுக்கு தான். இனிமேல் அந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார். எடப்பாடி பழனிசாமி பேச்சு குறித்து சிபிஎம் எம்எல்ஏ லதா கூற, மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தார் காங்., எம்எல்ஏ தாரகை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-women-have-chastity-cpm-woman-mla-latha-questions



