விஜய்யின்‘ஜனநாயகன்’ படத்தின் புதிய புரோமோ வெளியானது. தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், தணிக்கைப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வருகிற 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் இறுதியான படமென்பதால் உலகளவில் 3,500 திரைகளுக்கு மேல் வெளியாகவுள்ளது. டிக்கெட் முன்பதிவு விற்பனை ‘ஜனநாயகன்’ படத்திற்கான முன்பதிவு மிகப்பெரிய வரவேற்புடன் தொடங்கியது. முன்பதிவு டிக்கெட் விற்பனை ரூ. 15 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே முதல் நாளில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல்லானது. விஜய் முதல்-அமைச்சர் ஆன பின்பு வெளியாகும் படம் என்பதால் பெரிய வெற்றி பெற வைக்க வேண்டும் என அவரது கட்சியினரும் முனைப்புடன் செயல்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே இணையங்களில் திருட்டுத்தனமாக படம் லீக் ஆனாலும் ரசிகர்கள் முன்பதிவில் ஆர்வம் காட்டி வருவதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆன்லைன் முன்பதிவு இணையதளம் ஒன்றில் தற்போது வரையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த வார இறுதி வரையில் முன்பதிவு சீக்கிரம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ரூ.1,000 கோடி கிளப்பில் நுழைய வாய்ப்புள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் 2வது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/jananayagan-film-team-released-the-2nd-promo




