திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் மற்றும் அதனுடன் இணைந்த கோவில்களில் இந்த மாதம் (ஆகஸ்டு) முழுவதும் பல்வேறு சிறப்பு விழாக்கள் நடக்கின்றன. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இந்த மாதம் 7, 14, 28 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகள்) மாலை 6 மணிக்கு கோவிலின் நான்கு மாடவீதிகளில் திருச்சி உற்சவம் நடக்கிறது. 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு தங்கத்தேரோட்டம், 25-ந்தேதி உத்திராட நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 6.45 மணிக்கு கஜ வாகன வீதிஉலா நடக்கிறது. பலராம கிருஷ்ணர் கோவில் பலராம கிருஷ்ணர் கோவிலில் வருகிற 8-ந்தேதி ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு திருச்சி உற்சவம், சுந்தரராஜசாமி கோவிலில் நாளை (திங்கட்கிழமை) மற்றும் 30-ந்தேதிகளில் உத்திரட்டாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு கோவிலின் நான்கு மாடவீதிகளில் திருச்சி உற்சவம் நடக்கிறது. சூரியநாராயணசாமி கோவில் சூரியநாராயணசாமி கோவிலில் வருகிற 17-ந்தேதி ஹஸ்த நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 5 மணிக்கு திருச்சி உற்சவம் நடைபெறுகிறது. திருச்சானூர் சீனிவாசர் கோவிலில் 8, 15, 22, 29-ந்தேதிகளில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்பலாயகுண்டா திருப்பதியை அடுத்த அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் 4-ந்தேதி அஷ்டதள பாத பத்மாராதனை சேவை, 7, 14, 21, 28-ந்தேதி வெள்ளிக்கிழமைகளில் வஸ்திர அலங்கார சேவை மற்றும் அபிஷேகம் நடக்கிறது. 12-ந்தேதி அஷ்டோத்தர சத கலசாபிஷேகம், 26-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேஸ்வரருக்கு கல்யாணோற்சவம், 9, 16, 23, 30-ந்தேதிகளில் காலை 8.15 மணிக்கு பிரசன்ன ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் இந்த திருவிழாக்களில் பங்கேற்று, தரிசனம் செய்து அருள் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/special-festivals-at-padmavathi-temple-and-its-affiliated-temples-in-august-2026




