சென்னை, 122-வது பிறந்த நாளான இன்று, சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள். சி.பா. ஆதித்தனார் பிறந்த நாள் 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 122-வது பிறந்த நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு, சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள அவரது முழு உருவச் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. சிலை அருகே அவரது உருவப்படமும் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் விழா நடைபெற்றதால் மயிலாட்டம், காளையாட்டம் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை அணிவித்து மரியாதை சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதேபோல், தினத்தந்தி, டி.டி.நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல், தந்தி ஒன் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் மரியாதை செலுத்தினார்கள். அரசியல் தலைவர்கள் மரியாதை இதேபோல், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், பிற அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நிர்வாகிகள், நாடார் சங்கங்களின் நிர்வாகிகள் உள்பட பலர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/22nd-birth-anniversary-leaders-pay-tribute-to-s-p-adithanars-statue




