அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வரும் கரோலின் லெவிட், இம்மாத இறுதியில் பதவியில் இருந்து விலக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். 28 வயதான கரோவின் லெவிட்டுக்கு கடந்த மே மாதம் தனது 2-வது குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர் சிறிது காலம் விடுப்பு எடுத்திருந்த நிலையில், சமீபத்தில்தான் மீண்டும் வெள்ளை மாளிகையில் பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் அவர் பதவி விலக உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளருக்குத் தேவைப்படும் தொடர்ச்சியான நேரம், ஆற்றல் மற்றும் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்ற சூழலில்,எனது 2 சிறு குழந்தைகளுக்கும் சிறந்த தாயாக என்னால் இருக்க முடியாது என்று என் மனம் உணர்ந்தது. அதனால்தான் வெள்ளை மாளிகையிலிருந்து விலகி எனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் இந்த இனிப்பும் கசப்பும் கலந்த முடிவை நான் எடுத்துள்ளேன்" என்றார். கரோலின் லெவிட் இந்த முடிவை நான் முழுமையாகப் புரிந்துகொண்டு மதிக்கிறேன் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/us-white-house-press-secretary-carolyn-levitt-resigns




