காத்மாண்டு, நேபாளம் வெள்ளம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளத்தில் இருந்து தப்பித்து தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஓடும் ஒரு பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கட்டுக்கடங்காத அந்த பெருவெள்ளம் தனது பாதையில் இருந்து மரங்கள், செடிகள், கட்டடங்கள், பாலங்கள், கார், பேருந்து என அனைத்தையும் அடித்து இழுத்து செல்கிறது. அந்த பெண் தனது 2 குழந்தைகளின் கையை பிடித்துக்கொண்டு சாலையில் இருந்து மேடான பகுதியை நோக்கி விரைந்து ஓடிச்செல்கிறார். அவர்கள் அந்த சாலையில் இருந்து சில நொடிகளில் அந்த இடத்தை வெள்ள நீரில் முழுவதுமாக ஆக்கிரமித்தது. சாலையில் நடப்பட்டிருந்த மின் கம்பங்கள் வெடித்து சிதறுகிறது.அந்த வீடியோவில் இருந்த 2 குழந்தைகளும் பள்ளி செல்லும் சீருடை அணிந்துள்ளனர். சமூகவலைத்தளத்தில் அந்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர். எந்தவொரு சூழலிலும், 2 குழந்தைகளை அவ்வளவு வேகமாகச் செயல்பட வைப்பதே ஒரு வியக்கத்தக்க விஷயம், உயிர் பிழைப்பதே கடினமான ஒரு குழலில் அதைச் சாதித்தது என்பது இன்னும் மிக உயர்ந்த நிலையிலான ஒரு செயலாகும் என பாராட்டி உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/mother-saves-2-children-from-nepal-floods-by-a-thread




