'சமையல் தெரியும். அதை வைத்து என்ன செய்ய முடியும்?' என்று பலரும் யோசித்திருக்கலாம். ஆனால், பல ஆண்டுகளாக வீட்டுக்காக மட்டுமே பயன்படுத்திய சமையல் திறமையைத் தொழிலாக மாற்றி, இன்று கோடிகளில் வருமானம் ஈட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் பீகாரைச் சேர்ந்த தேவ்னி தேவி. 16 வயதிலேயே திருமணம். 25 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கை. வீட்டில் உள்ள அனைவருக்கும் தினமும் உணவு தயாரிப்பது அவரது பொறுப்புகளில் ஒன்றாக இருந்தது. சமையல்'எதிர்பார்க்கப்பட்டதுதான்' ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதின் கட்சி - காரணம்? எத்தனை பேருக்கு எவ்வளவு சமைக்க வேண்டும், தேவையான பொருள்களை எப்படித் திட்டமிட வேண்டும் எனப் பல ஆண்டுகளாகக் கற்றுக்கொண்ட அனுபவம், பின்னாளில் அவருக்கே தெரியாமல் ஒரு தொழில் திறனாக மாறியிருக்கிறது. 2002-ல் குழந்தைகளின் கல்விக்காக பாட்னாவுக்கு வந்தபோது, அவரது வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்பட்டது. அங்கு மருத்துவ மாணவர்களின் உணவுப் பிரச்னையைக் கவனித்துள்ளார். வீட்டுச் சாப்பாட்டைப் போலத் தரமான உணவு கிடைக்காமல் பல மாணவர்கள் சிரமப்படுவதைப் பார்த்த தேவ்னி, அவர்களுக்காகச் சமைக்க முடிவு செய்தார். அதற்காகவே சிறிய அளவில் உணவு தயாரித்து மாணவர்களுக்கு வழங்கத் தொடங்கினார். ஒரு சாப்பாட்டின் விலை வெறும் ரூ.20. சௌரப் என்ற மருத்துவ மாணவர் ஆரம்பத்தில் டிபன் சேவை தொடர்பான விஷயங்களைப் புரிந்துகொள்ள அவருக்கு உதவியாக இருந்துள்ளார். தொடக்கத்தில் சமையல் முதல் உணவு கொண்டு சேர்ப்பது வரை அனைத்தையும் தேவ்னியே செய்துள்ளார். சுவையான வீட்டுச் சாப்பாடு என்பதால் மாணவர்களிடையே அவரது உணவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பலரும் அவரை அன்புடன் ‘அம்மா’ என்று அழைக்கத் தொடங்கினர். இதுவே பின்னாளில் அவரது தொழிலுக்கும் ‘அம்மா கிச்சன்’ என்ற பெயராக மாறியது. ஹோட்டல்உக்ரைன் போர்: 'ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் வடகொரியத் தொழிலாளர்கள்' - இருநாடுகளுக்கும் என்ன பலன்? தொழில் வளர்ந்தபோது கிடைத்த பணத்தை அப்படியே செலவு செய்யாமல், ரூ.80,000 சேமித்து எட்டு ரிக்ஷாக்களை வாங்கினார். அதன்மூலம் மற்றொரு வருமான வாய்ப்பையும் உருவாக்கினார். 2009-ல் தனது பேத்தியின் பெயரில் சம்ரிதி பெண்கள் விடுதியையும் தொடங்கினார். கொரோனா காலத்தில் மாணவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியதால் தொழில் பாதிக்கப்பட்டது. இருந்தாலும், மருத்துவர்கள் தங்கியிருந்த விடுதிகளுக்கு உணவு வழங்குவதை அவர் நிறுத்தவில்லை. பின்னர் அவரது மகனின் ஆலோசனையால் 2022-ல் ‘அம்மா கிச்சன்’ ஆன்லைன் உலகத்துக்குள் நுழைந்தது. ஆர்டர்கள் அதிகரித்தன. தொடர்ந்து உணவகங்களும் தொடங்கப்பட்டன. இன்று பாட்னாவில் இரண்டு உணவகங்கள், 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தினமும் சுமார் 350 ஆன்லைன் ஆர்டர்கள் என ‘அம்மா கிச்சன்’ வளர்ந்திருக்கிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.2.5 கோடி வருவாய் கிடைப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டுச் சமையலறையில் தொடங்கிய பயணம், இன்று பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழிலாக மாறியிருக்கிறது. தேவ்னி தேவியின் கதை சொல்லும் பாடம் ஒன்றே “வாய்ப்பு வெளியிலிருந்து வர வேண்டும் என்பதில்லை; நம்மிடம் இருக்கும் திறமையிலேயே அதை உருவாக்க முடியும்!" முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/features/bihar-woman-turns-home-cooking-skills-into-25-crore-business




