ஆனைமலை, ஆனைமலையில் புகழ்பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அவர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவிலில் உள்ள 22 நிரந்தர உண்டியல், 9 தட்டுக்காணிக்கை உண்டியல் ஆகியவற்றை நேற்று அதிகாரிகள் முன்னிலையில் முறைப்படி திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணி இதை கோவில் தக்கார் ராஜ்குமார், துணை ஆணையர் சுவாமிநாதன், சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை ஆணையர் விமலா, ஆனைமலை சரக ஆய்வர் சித்ரா, கோவில் கண்காணிப்பாளர்கள் சீனிவாசன் மற்றும் நிர்மலாதேவி ஆகியோர் மேற்பார்வையிட்டனர். இதில், மொத்தம் ரூ.78 லட்சத்து 29 ஆயிரத்து 51 ரொக்கப் பணம் வசூல் ஆகி இருந்தது. மேலும் 77 கிராம் தங்கம், 139 கிராம் வெள்ளி ஆகியவையும் இருந்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், சலவநாயக்கன்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/rs-78-lakhs-in-bank-notes-offered-at-anaimalai-masani-amman-temple




