சென்னை, கூட்டுறவு துறை சார்ந்த கோரிக்கை மீது நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வட்டார அளவில் கூட்டுறவு சார் பதிவாளர் அலுவலர்கள் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மணுக்களை பெற்று அவற்றை தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து தீர்வு காண வேண்டும் என்றும், கூட்டுறவு பதிவாளர் மற்றும் கள அலுவலர் அளவில் தீர்வு காண இயலாத கோரிக்கை மணுக்களையும் துணை பதிவாளர்களால் நேரடியாக பெறப்படும் கோரிக்கை மனுக்களையும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து தீர்வு காணவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் தீர்வு காண முடியாத கோரிக்கை மணுக்களையும் மண்டல இணை பதிவாளர்களால் நேரடியாக பெறப்படும் மணுக்களையும் மாதம்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை என்று மண்டல இணைப்பதிவாளர்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. உடனுக்குடன் தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்த மாதாந்திர அறிக்கையை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-resolution-for-petitions-related-to-the-cooperative-department-guidelines-issued




