Article complet
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் முதலமைச்சரைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கிறார்கள், சின்னத்திரை சங்க நிர்வாகிகள். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சி அமைத்திருக்கிறது, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். விஜய் முதல்வராகப் பதவி ஏற்ற உடனேயே தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், சீரியல் தயாரிப்பாளர் சங்கம் முதலான சில சங்கங்களின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இத்தனைக்கும் விஜய் கட்சியைத் தொடங்கியது முதல் ஏப்ரல் மாதம் சந்தித்த அந்த முதல் தேர்தல் வரை தமிழ் சினிமா பக்கமிருந்து அவருக்குப் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. திமுக-வுக்கு பயந்தா அல்லது எதற்கு எனத் தெரியவில்லை, முக்கிய சினிமா நட்சத்திரங்கள் பலர் அவர் கட்சி தொடங்கியதற்குகூட வாழ்த்துச் சொல்லாத நிலைதான் இருந்தது. ஆனால் தேர்தல் முடிந்த பிறகு வரிசையாக வாழ்த்துச் சொன்னார்கள். பலர் நேரில் சென்று வாழ்த்திவிட்டு வந்தனர். ராஜ்மோகன் இந்தப் பின்னணியில் சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகளும் முதல்வரைச் சந்தித்து வாழ்த்துச் சொல்ல நேரம் கேட்டு கடிதம் கொடுத்தார்களாம். ஆனால் இதுவரை முதல்வர் அலுவலக தரப்பிலிருந்து அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை என்கிறார்கள். இது தொடர்பாக சங்க உறுப்பினர்கள் சிலரிடம் பேசியபோது, ``நடிகர் சங்கம்கிறது பொதுவா அரசியல் கலப்பில்லாம இருக்கணும். எல்லோருக்கும் அரசியல் விருப்பு வெறுப்புகள் இருக்கும். ஆனா சங்கம்னு வந்துட்டா அதை ஓரமா ஒதுக்கி வச்சுட்டு எல்லா கட்சிகளையும் சமமா மதிச்சு செயல்படணும். ஆனா கடந்த சில வருடங்களாகவே அப்படியில்லாம அரசியலை சங்கத்துக்குள் அனுமதிச்சதின் விளைவுதான் இன்றைய சூழலுக்கு காரணம். கடைசியா சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தலில், திமுக பிரமுகரான பூச்சி முருகனின் தலையீடு பெரிய அளவில் இருந்தது. விஜய் இப்ப திமுக ஆட்சி மாறி தவெக ஆட்சி அமைஞ்ச பிறகு, அந்த ஆட்சியாளர்களை அணுகுறதுல சங்கடங்கள் தவிர்க்க முடியாததாகிடுச்சு. விஜய்யின் நண்பர் சஞ்சீவ் தொடங்கி அருண், தினேஷ், ஈஸ்வர், நடிகைகள் சாந்தினி, ஷப்னம் என இப்போது டிவி ஏரியாவில் தவெக ஆதரவாளர்கள் அதிகம் பேர் இருக்கிறாற்கள். ஆனாலும் நிர்வாகிகள் சிலருடைய நடவடிக்கைகளால் மொத்த உறுப்பினர்களும் பாதிக்கப்படுறாங்க. முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கிடைக்கலை... அமைச்சர் ராஜ்மோகன் இந்தச் சங்கத்தின் உறுப்பினரும்கூட" என்கிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Article complet — lien ci-dessous


