இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் பேசியிருக்கிறார். 1993-ஆம் ஆண்டில் மத அடிப்படையில் கொடுமைகளை அனுபவித்த ஒரு ஹிந்து குடும்பத்தில் வாழ்க்கையை மையமாக வைத்து தஸ்லிமா நஸ்ரின் எழுதிய 'லஜ்ஜா' நாவல், வங்கதேசத்தில் கடுமையான எதிர்ப்பலைகளைக் கிளப்பியது. அதனால் அவர் தனது சொந்த நாட்டை விட்டு வெளியேற நேரிட்டது. தஸ்லிமா நஸ்ரின் அதன் பிறகு, மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் குடியேறிய அவர், 'த்விகண்டிதோ' என்ற தலைப்பில் தனது சுயசரிதை நூலை வெளியிட்டார். இந்தச் சுயசரிதை நூல் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியதுடன், வன்முறை வெடிப்பதற்கும் காரணமாக அமைந்தது. இதன் விளைவாக அவர் இந்தியாவிலிருந்தும் வெளியேறினார். இந்நிலையில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் கொல்கத்தா வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். " கடந்த 40 ஆண்டுகளாக பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக நான் குரல் எழுப்பி வருகிறேன். இந்தச் சட்டம் நாகரிகமான நாட்டில் மிகவும் அவசியம். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு அந்தச் சட்டம் தேவை. அனைவருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டும். பெண்கள் பெரிய அளவில் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். அந்தப் பாகுபாட்டில் பெருமளவை பொது சிவில் சட்டம் மூலம் நீக்க முடியும். தஸ்லிமா நஸ்ரின் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சி என்னை மாநிலத்தில் இருந்து வெளியேற்றியது. அதன் பின்னர் அமைந்த திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி, நான் மேற்கு வங்கம் திரும்ப அனுமதிக்கவில்லை. தற்போது அமைந்துள்ள பாஜக ஆட்சி, நான் மேற்கு வங்கம் திரும்ப அனுமதித்துள்ளது. இந்த வித்தியாசங்களில் கவனம் செலுத்துவதைவிட, நான் மீண்டும் மேற்கு வங்கம் வரமுடிந்ததை கொண்டாட வேண்டும் என்றே கருதுகிறேன்" என்று கூறியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/taslima-nasreen-backs-ucc-says-india-bangladesh-pakistan-need-it




