மணிலா பிலிப்பைன்சில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, அந்நாட்டின் தலைநகர் மணிலாவில் இருந்து பலாவான் மாகாணத்தில் உள்ள கோரன் நகருக்கு நேற்று முன் தினம் படகு சென்றுகொண்டிருந்தது. அந்த படகில் 132 பேர் பயணித்தனர். அந்த படகில் பைக்குகள், கார்கள், அத்தியாவசிய பொருட்கள் என பல்வேறு சரக்குகளும் கொண்டு செல்லப்பட்டன. படகு தீ விபத்து இந்நிலையில், கோரன் நகருக்கு அருகே சென்றபோது நடுக்கடலில் வைத்து படகில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் படகு முற்றிலும் எரிந்து நாசமானது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படகில் இருந்தவர்களை மீட்டனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் 5 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது. 35 பேர் பலி ஆனால், பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதன்படி, மீட்புப்பணியின்போது மேலும் 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் படகு தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. படகில் இருந்து 43 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் 54 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/philippines-boat-fire-death-toll-rises-to-35




