தமிழ்நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு 2023-ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்துவதற்கான முன்னெடுப்புப் பணிகள் நடத்தப்பட்டது. ஆனால் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகிகள் இல்லாத நிலை நிலவுகிறது. அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- த.வெ.க. அரசு அமைந்த பிறகு கூட்டுறவு சங்கங்களில் உள்ள போலி உறுப்பினர்கள், மறைந்த உறுப்பினர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்ட பிறகு இந்த மாதம் (ஆகஸ்டு) கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.கூட்டுறவு சங்க தேர்தலை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையோடு நடத்த தயாராக உள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டு றவு சங்கம், வேளாண் கூட்டுறவு மற்றும் விற்பனை சங்கம், மாவட்ட மத் திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு மொத்த விற்பனை சங்கம், வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சங்கங்கள் மூலம் 2 லட்சம் பேர் தேர்வாகி பணியாற்றுவார் கள். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-elections-for-cooperative-societies-be-held-minister-gandhiraj-responds




