காரைக்குடி, பைக் மீது கார் மோதி தம்பதி காயமடைந்த வழக்கில், சம்பந்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா ஊனையூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் கார்த்திகேயன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி கணவன்- மனைவி இருவரும் ஊனையூரில் இருந்து காரைக்குடியில் உள்ள மருத்துவமனைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பலத்த காயம் மறிச்சுகட்டு பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த கார், பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயன் பலத்த காயம் அடைந்தார். தமிழ்ச்செல்வி லேசான காயம் அடைந்தார். இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமயம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் இதுகுறித்த புகாரின் பேரில் செட்டிநாடு போலீசார் காரை ஓட்டி வந்த காரைக்குடி பாரிநகரை சேர்ந்த பீட்டர் (வயது 51) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர் தற்போது புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வருகிறார். சிறை தண்டனை இந்த வழக்கு காரைக்குடி கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் செல்வராஜ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி கார்மேக கண்ணன், லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பீட்டருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/couple-injured-after-car-hits-bike-anti-corruption-police-inspector-jailed




