சென்னை, இந்தியாவில் 84,318 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன அதில் 93 சதவீதம் அரசுப் பள்ளிகள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- அரசு பள்ளிகள் மோடி அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தவறான கல்விக் கொள்கைகளாலும் நம் நாட்டின் அரசுப்பள்ளிக் கல்வி கட்டமைப்பு மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 84,318 பள்ளிகள் காணாமல் போயுள்ளன. இதில் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், மூடப்பட்டவற்றில் 93 சதவீதப் பள்ளிகள் அரசுப் பள்ளிகள்தான். சுமார் 78,502 அரசுப் பள்ளிகளுக்கு மோடி அரசு மூடுவிழா நடத்தியுள்ள அதே வேளையில், 15,461 தனியார் சுயநிதிப் பள்ளிகள் காளான்கள் போலப் பெருகியிருப்பது இவர்கள் யாருக்காக ஆட்சி நடத்துகிறார்கள் என்பதைத் தெள்ளத்தெளிவாக காட்டுகிறது. சமூக நீதியையும் பொது கல்வியையும் உயிர்மூச்சாகக் கொண்ட நமது தமிழ்நாட்டிலும் கூட, இந்த ஒன்றிய அரசின் தவறான அணுகுமுறையால் சுமார் 1,976 பள்ளிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பிஎம் ஸ்ரீ திட்டம் கிராமப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர்களின் ஒரே புகலிடமாக விளங்கும் அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கு உரிய நிதி ஒதுக்காமல், பள்ளிக் கல்வியை திட்டமிட்டுச் சீரழிக்கும் வேலையை பாஜக அரசு தீவிரமாகச் செய்து வருகிறது. குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்கவில்லை என்பதற்காகவே, கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய மொத்தம் ரூ.5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. நீதிமன்றம் தலையிட்டதால் வேறு வழியின்றி RTE- க்கு மட்டும் ரூ.714 கோடியை கிள்ளிப் போட்டுவிட்டு, ஒட்டுமொத்த பள்ளி கல்வி நிதியையும் தடுத்து வைத்து தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு பிளாக்மெயில் அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது! மத்திய அரசு "பள்ளி சீரமைப்பு மற்றும் முறைப்படுத்துதல்" என்ற போலி அறிக்கையை வைத்துக்கொண்டு, ஒற்றை ஆசிரியர் பள்ளி, குறைவான மாணவர்கள் என்ற காரணங்களைக் கூறி எளிய மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கப் பார்க்கிறார்கள். பள்ளிகளை ஒருங்கிணைக்கிறோம் என்ற பெயரில் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடி, ஒட்டுமொத்தக் கல்வியையும் கார்ப்பரேட் மற்றும் தனியார் கல்வி மாபியாக்களின் கைகளில் தாரைவார்ப்பதே மோடி அரசின் உண்மையான நோக்கம். அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கி மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்குத் திறனற்றி மத்திய அரசு, மாநிலங்களுக்கான சட்டப்பூர்வ நிதிப் பங்கையும் வஞ்சகமாக மறுத்து, தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்யும் வகையில் அரசு பள்ளிகளை ஒழித்துக் கட்டுவதை உடனடியாகக் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/84318-schools-closed-in-india-93-percent-government-schools-manickam-thakur




