திருப்பதி, தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம், ஜல்பள்ளி வாடி, முஸ்தப காலனியை சேர்ந்தவர் ஷோயப் என்கிற புர்கான் (வயது 19), மது போதைக்கு அடிமையானதால் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அதே தெருவில் வசிக்கும் நஜ்முதீன் என்பவர் வீட்டில் திருடச் சென்றார். அப்போது குடும்பத்தினர் ஒரு அறையில் தூங்கிக கொண்டிருந்தனர். வீட்டிற்குள் சென்ற ஷோயப் மற்றொரு படுக்கை அறைக்கு சென்றார். அங்கிருந்த பீரோவை திறந்து அதிலிருந்த தங்கம் எல்லாம் பூசப்பட்ட நகைகள், வளையல்கள் மற்றும் ஒரு செல்போனை எடுத்துக் கொண்டார். மதுபோதையில் இருந்ததால் சிறிது நேரம் தூங்கி விட்டு செல்லலாம் என முடிவு செய்தார். அங்கிருந்த கட்டிலுக்கு அருகே தரையில் துண்டை விரித்து படுத்து தூங்கினார். காலை 7 மணிக்கு நஜ்முதீன் குடும்பத்தினர் வந்து பார்த்தபோது நகை திருடிய வாலிபர் குரட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் பஹாடி ஷெரிப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்தபோது ஷோயப் அவரை போலீசார தட்டி எழுப்பி போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். திருட வந்த இடத்தில் மது போதையில் தூங்கி விட்டதாக ஷோயப் போலீசாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அவசிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/caught-fast-asleep-at-house-he-robbed-hyderabad-thief-goes-viral



