'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந் திரபிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் போராட் டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மாணவர்கள் போராட்டம் குறித்து பிரதமர் மோடி கடந்த மாதம் 23-ந்தேதி முதல் முறையாக நேரடி உரையாக ஒரு வீடியோ பதிவு செய்து சமூக வலைத்ளங்களில் வெளியிட்டார்.அந்த வீடியோவில் "வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். கடுமையான சட்ட விதிகள் மத்திய மந்திரி சபையின் முன் கொண்டு வரப்படும்" என்று கூறியிருந்தார். விளக்கம் ஆனால் இந்த வீடியோ பேஸ்புக் சமூக ஊடக பதிவை நேற்று முன்தினம் அதிகாலை அதன் தாய் அமைப்பான மெட்டா நிறுவனம் நீக்கி பின்னர் 5 மணி நேரம் கழித்து மீண்டும் சேர்த்தது. இதனை தொடர்ந்து மத் திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டாவின் உலகளாவிய விவகாரங்கள் தலைவர் ஜோயல் கப்லான், இன்ஸ்டா கிராமின் தலைவர் ஆடம் மொசேரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. இதற்கு விளக்கம் அளித்த மெட்டா நிறுவனம் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கோரியதோடு, பிரதமர் மோடியின் பேஸ்புக் பதிவு தவறுதலாக அகற்றப்பட்டது என்றும், அது பின்னர் அந்த தளத்தில் மீண்டும் சேர்க்கப் பட்டதாகவும் விளக்கம் அளித்தது. நடவடிக்கை இதனிடையே இதுகுறித்து நாடாளுமன்ற நிலைக்குழு (தகவல் தொழில் நுட்பம்) கூகுள், எக்ஸ், மெட்டா, ஸ்நாப்சாட் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் கடந்த 3-ந்தேதி டெல் லியில் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத் தில் இந்த நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.இந்நிலையில் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை செயலக இயக்கு னர் ஜோதிர்மயி கையெழுத்துட்டு ஒரு கடிதம் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு அனுப்பபட்டு உள்ளது. அதில், “பிரதமர் மோடியின் வீடியோவை பேஸ்புக்கில் இருந்து நீக்கியது தொடர் பாக மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க வேண்டும். 3 நாட்களுக்குள் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர தவறினால், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் மற்றும் பெண் களுக்கு எதிரான இழிவுபடுத்தும் உள்ளடக்கத்தை கொண்டு செல்லும் இடைநிலை தளங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தளங் கள் தங்கள் வலைத்தளங்களில் இருந்து குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக தகவல்களை அகற்ற தவறினால் தகவல் தொழில்நுட்ப சட் டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மோசடி செயலிகள் மூலம் முதலீட்டாளர்கள் பணம் இழந்தது தொடர்பாக கூகுள் இந்தியா தலைவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தது. மன்னிப்பு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து பேசிய மெட்டா நிறுவன நிர்வாகிகள் குழு தங்களது சமூக தளங்களின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளை ஒப்புக்கொண்டனர். மேலும், குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கம் மற்றும் டீப் பேக் தொடர்பான தோல்விகளை நிறுவனத்தின் நிர்வாகிகள் ஒப்புக் கொண்டதோடு, ஒரு குறிப்பிட்ட வகை உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்காக அதிக பணம் கொடுக்கப்பட்டது என்பதையும் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் பதிவை தற்காலிகமாக நீக்கியதற்கு மெட்டா தலைமை நிர்வாகி மார்க் ஜூக்கர்பெர்க் வீடியோ வழியாக மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/did-meta-founder-mark-zuckerberg-apologize-to-the-parliamentary-committee-2




