திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். தற்போது தினமும் பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். இந்தநிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதை செங்கம் ரோடு சந்திப்பு பகுதியில் பரிகாரநந்தி அருகாமை யில் சுமார் 2 ஆயிரம் சதுர அடி கொண்ட இடத்தை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் கோவில் இணை ஆணை யர் பரணிதரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக இந்து சமய அற நிலையத் துறை அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்பினை அகற்ற உத்தரவிட்டார். சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் சதுர அடி இடத்தில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து இரும்பு கூடாரங்களை பிரித்து எடுத்ததுடன் ஆக்கிரமிப்பில் இருந்த பொருட்களையும் அங்கி ருந்து உடனடியாக அப்புறப்படுத்தி இடத்தை மீட்டு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/tamilnadu-election-2026-webstories/land-worth-rs-4-crores-encroached-by-andhra-pradesh-priest-on-riwalapathi-recovered




