கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று (ஆகஸ்ட்.8) நடைபெற்றது. டாக்ஸிக் படத்தில் நயன்தாரா இதில் கலந்துகொண்டு பேசிய நயன்தாரா, "நிறைய நடிகர்-நடிகைகள் நடிக்கும் படங்களை நான் ஏற்றுக் கொள்வதில்லை. அதுபோன்ற படங்களில் நடிப்பதற்கு நான் சற்று தயங்குவேன். கீது மோகன்தாஸ் இந்தப் படத்தில் நடிப்பதற்கு என்னை அழைத்தபோது நான் நடிக்க மறுத்தேன். Toxic: "அந்தப் பிரச்னையை நீங்கள் கையாண்ட விதம் எனக்கு பிடித்திருந்தது" - நயன்தாரா குறித்து யஷ் ஆனால் கீது என்னிடம் 10 மில்லியன் கேள்விகளைக் கேட்டார். ஒரு வழியாக நான் அவரிடம், 'சரி, கதையைச் சொல்லுங்கள்' என்றேன். கதையைச் சொன்னதும் அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். யஷ் உடனடியாக அந்தப் படத்தில் நடிப்பதற்குச் சம்மதித்தேன். இது ஒரு சாதாரண படம் அல்ல. இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். அதற்கு காரணம் யஷ் என்று நினைக்கிறேன். பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளேன். அவர்கள் அனைவரில் இருந்தும் வேறுபட்டவர் யஷ். அவரைப் போல கடினமாக உழைக்கும் ஒருவரை நான் பார்த்ததில்லை. யஷ் உண்மையிலேயே ஒரு மான்ஸ்டர்" என்று பேசியிருக்கிறார். Toxic: "அந்தப் பிரச்னையை நீங்கள் கையாண்ட விதம் எனக்கு பிடித்திருந்தது" - நயன்தாரா குறித்து யஷ் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/kollywood/nayanthara-about-yash-in-toxic-movie-audio-launch




