"நமது மாணவர்களே நமது எதிர்காலம்"- இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சித்தார்த் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராடும் கரப்பான் பூச்சி கட்சியின் இளைஞர்களுக்கு நடிகர் சித்தார்த் ஆதரவு தெரிவித்திருக்கிறார். நடிகர் சித்தார்த் இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கும் அவர், "அரசியல் விருப்பங்கள் எதுவாக இருந்தாலும், மனிதநேயமே எல்லாத்திற்கும் மேலாக இருக்க வேண்டும். நமது தைரியமான மாணவர்களுக்கு மரியாதை, கண்ணியம் நிறைந்த ஒரு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்க வேண்டும். மேலும், பயனுள்ள உரையாடல்களுக்கு உண்மையான முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பேசுவதைக் கேட்பதே உண்மையான முன்னேற்றத்தின் அடித்தளம். நமது மாணவர்களே நமது எதிர்காலம்" என்று பதிவிட்டிருக்கிறார். நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 20-ம் தேதி ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். பேரணியைத் தடுக்க முயன்ற டெல்லி போலீசார் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர். டெல்லி போராட்டம் இந்தச் சம்பவத்தில் பல மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தனர். மேலும், 6 வயது சிறுவன் ஒருவரும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல விளையாட்டு தொகுப்பாளரும், இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் மனைவியுமான சஞ்சனா கணேசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். "கண்ணீர் புகையால் குழந்தைகள் மூச்சுத் திணறுவதை ஜனநாயகத்தில் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. மக்களைப் பாதுகாக்க வேண்டியவர்களையே பார்த்து குடிமக்கள் அஞ்ச வேண்டிய நிலை ஏற்படக் கூடாது. ஆறு வயது குழந்தைக்கு இது நிகழக்கூடுமென்றால், இது யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம்" என்று பதிவிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/tamilnadu-and-india-live-news-updates-on-july-22nd




