சமீப காலமாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து கஞ்சா, வலி மாத்திரைகள் மற்றும் மெத்தமைன், ஐஸ் போன்ற போதை மருந்துகள் இலங்கைக்கு கடத்தி செல்லப்படுவது அதிகரித்து வருகிறது. கடற்பரப்பில் நடைபெறும் கடத்தல் சம்பவங்களை கண்காணிக்க சுங்கத்துறை மற்றும் கடற்படை என பல பிரிவுகள் இருந்தாலும், அவர்களது கண்காணிப்புகளையும் மீறி கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளது. கஞ்சா மூடைகள் இந்நிலையில் இலங்கைக்கு கடத்தப்படுவதற்கக காய்கறி வேனில் கஞ்சா கொண்டுவரப்படுவதாக ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள புதுமடம் பேருந்து நிறுத்தத்தில் க்யூ பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காய்கறி ஏற்றி வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு கைதானவர்கள் இந்த சோதனையின் போது உருளை கிழங்கு உள்ளிட்ட காய்கறி மூடைகளுக்கு இடையே சந்தேகப்படும் நிலையில் சில மூட்டைகள் இருந்துள்ளது. அவற்றை க்யூ பிரிவு போலீஸார் பிரித்த போது அதில் தலா 2 கிலோ எடையில் 146 பார்சல்களில் கஞ்சா இருந்துள்ளது. புதுமடம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக இவை கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 192 கிலோ கஞ்சாவினை பறிமுதல் செய்த க்யூ பிரிவு போலீஸார், வேனை ஓட்டி வந்த விளாத்திகுளத்தை சேர்ந்த தங்கராஜ், சேகர் மற்றும் பெருங்குளத்தை சேர்ந்த செந்தில்வேலன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/crime/marijuana-smuggling-hidden-in-potato-sacks-3-arrested-q-division-police-investigating




