நடிகர் பிரதீப் ரங்கநாதனின்பிறந்த நாளை முன்னிட்டு, ‘டிராகன்’ மற்றும் ‘டியூட்’ படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியான படம் ‘லவ் டுடே’. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிரதீப் ரங்கநாதன் இப்படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ‘டியூட்’ படம் பிரபல இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநரான கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘டியூட்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜு நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ரோகினி, நேகா ஷெட்டி, பரிதாபங்கள் ராகுல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி பெற்றது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் கீர்த்தீஸ்வரனிடம் ‘டியூட்-2’ திரைப்படம் உருவாகுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “டியூட்-2 குறித்து பிரதீப் ரங்கநாதனிடம் பேசியுள்ளேன். இரண்டாம் பாகம் உருவானால், அது டியூட் படத்தின் நேரடி தொடர்ச்சியாகவோ அல்லது அதே கதையுலகை மையமாகக் கொண்ட புதிய கதையாகவோ அமையும்” என்று தெரிவித்தார். இந்த தகவலால் ‘டியூட்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. happiest birthday to my dude and dearest bro PR — Keerthiswaran (@Keerthiswaran_) July 25, 2026 Wishing our dearest Dude a very Happy Birthday! ❤️ Keep smiling, keep inspiring, keep entertaining, and keep conquering new milestones. Have an amazing year ahead ❤ DUDE NATION, We have a surprise for you soon — Mythri Movie Makers (@MythriOfficial) July 25, 2026 ‘டிராகன்’ படம் பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த ‘டிராகன்’ படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்திருந்தார். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லொஹர் ஆகிய இருவரும் நடித்திருந்தனர். கல்லூரியில் படிப்பில் கவனம் செலுத்தாத மாணவன் டிராகன் (பிரதீப் ரங்கநாதன்) தொழில் வாழ்க்கைக்காக என்னென்ன வேலைகள் செய்கிறார் என்பதை சுவாரஸ்யமான முறையில் காட்சிப்படுத்திய இப்படம் பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் டுடே’, ‘டிராகன்’ பட வெற்றியை தொடர்ந்து ‘டியூட்’ படமும் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனையில் ஹாட்ரிக் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகர் பிரதீப் ரங்கநாதனின்பிறந்த நாளை முன்னிட்டு, ‘டிராகன்’ மற்றும் ‘டியூட்’ படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. இயக்குநர் கீர்த்தீஸ்வரன் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/pradeep-ranganathans-birthday-the-dragon-crew-released-a-video-to-wish-him




