சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு வேட்பாளர்களாக த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தா மன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள் ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. அதேபோல, தாராபுரம் தொகுதியில் 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். எனவே இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கி விட்ட நிலையில், இனி பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இடைத்தேர்தல் பரப்புரைக்காக தவெக சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, காதர் மொய்தீர் உள்ளிட்ட 40 பேர் நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/40-star-speakers-announced-by-thaveka-for-by-election-campaigning




