கொல்கத்தா, தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஆட்சிஅமைத்துள்ள முதல்-அமைச்சர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்', தற்போது வட மாநிலங்களிலும் தனது அரசியல் கொடியை பறக்கவிட்டு வருகிறது. கேரளாவை தொடர்ந்து, தற்போது மேற்கு வங்காள மாநிலத்திலும் தவெக தனது முதல் கிளை மற்றும் கட்சி அலுவலகத்தை திறந்துள்ளது. பகுபூரில் திறப்பு விழா மேற்கு வங்காள மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டம் பகுபூர் பகுதியில் தவெக-வின் புதிய கிளை அலுவலகத் திறப்பு விழா நேற்று மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தவெக-வின் மேற்கு வங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சைத்தாலி ராய் தலைமை தாங்கி, கட்சி அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். விஜய் - புஸ்ஸி ஆனந்த் படங்கள் கட்சி அலுவலகத்தின் விழா மேடையில், தமிழக முதல்-அமைச்சரும் தவெக தலைவருமான விஜய் மற்றும் தவெக முக்கிய நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன, இது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அலுவலகத் திறப்பு விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் சைத்தாலி ராய் கூறியதாவது:- சமூக சேவையே தாரக மந்திரம் "மேற்கு வங்காளத்தில் அரசியல் மோதல்களை தவிர்த்துவிட்டு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் போன்ற சமூக சேவைகள் மூலமாக மட்டுமே சாமானிய மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும் என்று கட்சித் தலைமை எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. முதற்கட்டமாக மக்கள் பணிகளை செய்துவிட்டு, அதன் பிறகு தேர்தல் களம் காண்பது குறித்து முதல்-அமைச்சர் விஜய் எடுக்கும் முடிவின்படி செயல்படுவோம். என்று கூறியுள்ளார். வடமாநிலத்தில் தவெக ஏற்கனவே அண்டை மாநிலமான கேரளாவின் பாலக்காட்டில் தவெக அலுவலகம் திறக்கப்பட்டு அம்மாநில மக்களிடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது வட இந்திய மாநிலமான மேற்கு வங்கத்திலும் தவெக கால்பதித்திருப்பது, தமிழக தலைவர்கள் மட்டுமின்றி தேசிய அரசியல் வட்டாரத்திலும் உற்றுநோக்கப்படும் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/opening-of-tvk-office-in-west-bengal




