சென்னை, ‘தி பாரடைஸ்’ படக்குழு நானி மற்றும் கயாடு லோஹர் இடம்பெறும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் கயாடு லோஹர் புகைபிடிக்கும் காட்சியில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கயாடு கன்னட திரைப்படமான ‘முகில்பேட்டை’ மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை கயாடு லோஹர், தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்தடுத்த படங்களில் பிஸி ‘டிராகன்’ படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் கயாடு லோஹருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இதையடுத்து ‘இதயம் முரளி’, ‘இம்மார்டல்’, ‘ஐ அம் கேம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘தி பாரடைஸ்’, ‘மஞ்சணத்தி’ உள்ளிட்ட படங்களிலும், நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படம் ஒன்றிலும் கயாடு லோஹர் நடித்து வருகிறார். நானியுடன் கயாடு லோஹர் இந்நிலையில், நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வருகிற 24-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையொட்டி, படக்குழு நானி மற்றும் கயாடு லோஹர் இடம்பெறும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் கயாடு லோஹர் புகைபிடிக்கும் காட்சியில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், அவர் படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில், “அவர்களுடைய காதல் நீங்கள் இதுவரை கண்டிராதது போன்றது” என படக்குழு கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளது. இதனால் கயாடு லோஹர் நாயகியா, வில்லியா அல்லது கதையில் வேறு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கான விடை படம் வெளியான பிறகே தெரியவரும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/villainess-or-heroine-kayadu-lohars-poster-builds-anticipation




