சென்னை, தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. தங்கம் விலை தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று முன் தினம் காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13 ஆயிரத்து 220-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையில் மாலையில் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.13 ஆயிரத்து 320-க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 560-க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-ம், பவுனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 350-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 300-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-have-dropped-what-is-the-situation-today




