சென்னை, திருப்பூர் எம்.பி. சுப்பராயன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- தவெக அரசு இதுவரை, தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளை ஆக்கபூர்வமாக எதிர்கொள்வதிற்குரிய, தனது திட்டவட்டமான கொள்கையை அறிவிக்கவில்லை. தனதுகொள்கைப் பிரகடனமாக அமைந்திருக்க வேண்டிய கவர்னர் உரை அவ்வாறு அமையவில்லை. பட்ஜெட், தளுக்கு, மினுக்கு நிறைந்த தனியார் மயப்பிரகடனமாகவே அமைந்துவிட்டது. 1991-ல் காங்கிரஸ் அரசால் அமலாக்கப்பட்டு, பாஜக- ஆர்.எஸ்.எஸ். அரசால் தீவிரமாக அமலாக்கப்பட்டு வருகிற, புதிய பொருளாதாரக் கொள்கை பற்றிய தவெக வின் கொள்கை நிலை என்ன? தவெகவின் அரசியல், பொருளாதாரக் கொள்கை வழி எது? நாட்டை நல்வழிப்படுத்தும் கொள்கை கொண்டஇடதுசாரிகளின் பாதையா? நாட்டை நாசகார பாதையில் இழுத்துச் செல்லும்வலதுசாரிகளின் பாதையா? தெளிவு படுத்துங்கள் முதல்-அமைச்சர் விஜய். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-path-of-the-left-or-the-path-of-the-right-vijay-mp-subbarayan-asks




