ராமநாதபுரம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27-ந்தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுலாவின் முக்கியத்துவம், அதன் சமூக, கலாசார, அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே உலக சுற்றுலா தினத்தின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இன்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியின் அரிச்சல்முனை பகுதியில் ராம யாத்திரை நாட்டியாஞ்சலி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் ராமாயணத்தின் சிறப்பை போற்றும் வகையில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் ராமர், சீதை, லட்சுமணன், அனுமான் வேடமணிந்து பரத நாட்டியம் ஆடி அசத்தினர். பல்வேறு இசைக்கலைஞர்களின் இசை வாத்தியங்கள் முழங்க இந்த விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழர்களின் கலை மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தை உலகறிய செய்யும் வகையில் அமைந்திருந்த இந்த நாட்டியாஞ்சலி விழாவை ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/rama-yatra-natyanjali-festival-held-at-dhanushkodi-to-mark-world-tourism-day




