தென்காசி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குற்றாலம் அருவிகள் தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இதனால் புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் முற்றிலும் குறைவாகவே விழுந்தது. புலியருவியும் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். நீர்வரத்து அதிகரிப்பு மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் லேசான சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அருவிகளில் தண்ணீர் சீராக கொட்டி வருகிறது. புலியருவிக்கும் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணி கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலம், இலஞ்சி பகுதியில் மாலையிலும் சாரல் மழை பெய்தது. குற்றாலம், தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குளிக்க தடை இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவால் குற்றாலம் அருவிகளில் இன்று காலை தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சாரல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. தற்போது அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சாரல் திருவிழாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனுமதி இந்நிலையில் அருவிகளில் தற்போது நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அங்குள்ள அருவிகளில் உற்சாகமாக குளித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-permitted-to-bathe-in-courtallam-waterfalls




